சேவை விதிமுறைகள்
பிற மொழிகளில் சேவை விதிமுறைகளைப் பாருங்கள்: English, অসমীয়া, ગુજરાતી, ಕನ್ನಡ, മലയാളം, मराठी, ଓଡ଼ିଆ, ਪੰਜਾਬੀ, தமிழ், తెలుగు மற்றும் हिन्दी
இந்த விதிமுறைகளில் என்னென்ன உள்ளன?
எங்கள் சேவை விதிமுறைகளில் (விதிமுறைகள்) செய்யப்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும் என்றாலும் புதிய விதிமுறைகள் முழுவதையும் நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
YouTubeக்கு வரவேற்கிறோம் !
இந்தப் பிரிவில் எங்களுடனான உங்கள் உறவு விளக்கப்பட்டுள்ளது. சேவை குறித்த விளக்கம், ஒப்பந்தத்தின் வரையறை, உங்கள் சேவை வழங்குநரின் பெயர் ஆகியவை இதில் இடம்பெறும்.
இந்தச் சேவையை யாரெல்லாம் பயன்படுத்த முடியும்?
சேவைப் பயன்பாட்டிற்கான குறிப்பிட்ட தேவைகளை இந்தப் பிரிவு குறிப்பிடுவதுடன் பயனர்களின் வகைகளையும் வரையறுக்கிறது.
உங்கள் சேவைப் பயன்பாடு
சேவைப் பயன்பாடு தொடர்பான உங்கள் உரிமைகளையும் பொருந்தும் நிபந்தனைகளையும் இந்தப் பிரிவு விளக்குகிறது. சேவையில் நாங்கள் எப்படி மாற்றங்களைச் செய்யக்கூடும் என்பதையும் இது விளக்குகிறது.
உங்கள் உள்ளடக்கமும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்
சேவைக்கான உள்ளடக்கத்தை வழங்கும் பயனர்களுக்கு இந்தப் பிரிவு பொருந்தும். உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதன் மூலம் நீங்கள் வழங்கும் அனுமதிகளின் வரம்பை இது வரையறுக்கிறது. மற்றவர்களின் உரிமைகளை மீறும் எதையும் பதிவேற்றக்கூடாது என்பதற்கான உங்கள் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
கணக்கை இடைநீக்குதலும் முடக்குதலும்
நீங்களும் YouTubeம் இந்த உறவை எப்படி முடித்துக்கொள்ளலாம் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது.
சேவையில் உள்ள மென்பொருள் பற்றிய தகவல்கள்
சேவையில் உள்ள மென்பொருள் குறித்த விவரங்கள் இந்தப் பிரிவில் இருக்கும்.
பிற சட்ட விதிமுறைகள்
நாங்கள் உங்களுக்கு வழங்கும் சேவை உறுதியளிப்பும் இந்தப் பிரிவில் இடம்பெறும். நாங்கள் எதற்கெல்லாம் பொறுப்பேற்க மாட்டோம் என்பதையும் இது விளக்கும்.
இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்கள்
இந்த விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அவை என்னவாக இருக்கும், அவற்றுக்கு எந்தச் சட்டம் பொருந்தும் போன்ற விவரங்கள் உட்பட எங்கள் ஒப்பந்தம் குறித்த சில கூடுதல் முக்கிய விவரங்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.
சேவை விதிமுறைகள்
தேதி: 5 ஜனவரி, 2022
சேவை விதிமுறைகள்
YouTubeக்கு வரவேற்கிறோம்!
அறிமுகம்
YouTube பிளாட்ஃபார்மில் வழங்கப்படும் தயாரிப்புகளையும் சேவைகளையும் அம்சங்களையும் (மொத்தமாக, "சேவை" என அழைக்கப்படும்) பயன்படுத்துவதற்கு நன்றி.
எங்கள் சேவை
வீடியோக்களையும் பிற உள்ளடக்கத்தையும் கண்டறியவும் பார்க்கவும் பகிரவும் இந்தச் சேவை அனுமதிக்கிறது. உலகம் முழுவதும் இருப்பவர்களை இணைக்கவும், அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் ஊக்கமளிக்கவும் இடமளிக்கிறது. அசல் உள்ளடக்கக் கிரியேட்டர்களுக்கும் சிறிய மற்றும் பெரிய விளம்பரதாரர்களுக்கும் விநியோகத் தளமாகவும் விளங்குகிறது. எங்கள் தயாரிப்புகள் பற்றியும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் ஏராளமான தகவல்கள் எங்கள் உதவி மையத்தில் கிடைக்கும். அத்துடன் YouTube Kids, YouTube கூட்டாளர் திட்டம், YouTube கட்டண மெம்பர்ஷிப்கள் மற்றும் பர்ச்சேஸ்கள் (கிடைக்கும் இடங்களில்) பற்றிய தகவல்களும் கிடைக்கும். மேலும் உங்கள் டிவி, கேம் கன்சோல், Google Home போன்ற பிற சாதனங்களில் எங்கள் உள்ளடக்கத்தைப் பார்ப்பது குறித்த அனைத்துத் தகவல்களையும் இங்கு பார்க்கலாம்.
உங்கள் சேவை வழங்குநர்
சேவையை உங்களுக்கு வழங்குவது டெலாவேர் சட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் Google LLC நிறுவனம். இது 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043 என்ற முகவரியில் இருந்து இயங்குகிறது (“YouTube”, “நாங்கள்”, “எங்கள்” அல்லது “எங்களுடைய” எனக் குறிப்பிடப்படுவது). இந்த விதிமுறைகளில் YouTubeன் “இணை நிறுவனங்கள்" எனக் குறிப்பிடப்படுபவை Alphabet Inc. கார்ப்பரேட் குழுவிற்குள் அடங்கும் பிற நிறுவனங்கள் ஆகும் (இப்போதும் எதிர்காலத்திலும்).
பொருந்தக்கூடிய விதிமுறைகள்
உங்கள் சேவைப் பயன்பாடு இந்த விதிமுறைகள், YouTube சமூக வழிகாட்டுதல்கள், கொள்கை, பாதுகாப்பு மற்றும் பதிப்புரிமைக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டது (மொத்தமாக "ஒப்பந்தம்" என அழைக்கப்படும்). இவை அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். நீங்கள் விளம்பரங்கள் அல்லது ஸ்பான்சர்ஷிப்களைச் சேவைக்கு வழங்கினாலோ உங்கள் உள்ளடக்கத்தில் கட்டண விளம்பரங்களைச் சேர்த்தாலோ எங்களுடனான உங்கள் ஒப்பந்தத்தில், YouTubeல் விளம்பரப்படுத்தலுக்கான கொள்கைகளும் சேர்க்கப்படும். இந்த விதிமுறைகளில் வழங்கப்பட்டிருக்கும் பிற இணைப்புகளும் குறிப்புகளும் தகவல் அளிப்பதற்காக மட்டுமே. அவை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல.
இந்த ஒப்பந்தத்தைக் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள். ஒப்பந்தம் புரியவில்லை என்றாலோ இதில் ஏதேனும் ஏற்புடையதாக இல்லை என்றாலோ சேவையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன் மூலம், நீங்கள் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர் என்பதையும், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு முழுத் தகுதியுள்ளவர் என்பதையும், இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கி இதன்படி நடப்பீர்கள் என்பதையும் ஏற்கிறீர்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவர் எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தேவைகளும் உங்களுக்குப் பொருந்தும்.
இந்தச் சேவையை யாரெல்லாம் பயன்படுத்த முடியும்?
வயது வரம்புகள்
சேவையைப் பயன்படுத்த நீங்கள் குறைந்தபட்சம் 13 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எனினும் பெற்றோரோ சட்டப்பூர்வக் காப்பாளரோ அனுமதித்தால் அனைத்து வயதுடைய பிள்ளைகளும் சேவையையும் YouTube Kidsஸையும் (கிடைக்கும் இடங்களில்) பயன்படுத்தலாம்.
பெற்றோரோ காப்பாளரோ அனுமதித்தல்
நீங்கள் உங்கள் நாட்டிற்கான சட்டப்பூர்வ வயதை அடையாத சிறார் எனக் கருதப்பட்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அல்லது காப்பாளர் அனுமதி வழங்கியுள்ளனர் எனக் குறிக்கிறீர்கள். அவர்களையும் இந்த ஒப்பந்தத்தை உங்களுடன் சேர்ந்து படிக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் உங்கள் நாட்டிற்கான சட்டப்பூர்வ வயதை அடையாத சிறாரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளர் என்ற முறையில் சேவையைப் பயன்படுத்த உங்கள் பிள்ளையை அனுமதித்தால், இந்த விதிமுறைகளுக்கு உட்படுவதுடன் சேவையில் பிள்ளையின் செயல்பாடுகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். உங்கள் குடும்பத்தின் YouTube அனுபவத்தை நிர்வகிக்க உதவும் கருவிகளும் தகவல்களும் எங்கள்உதவி மையம், Googleளின் Family Link ஆகியவற்றில் கிடைக்கின்றன. சேவை, YouTube Kids ஆகியவற்றை 13 வயதிற்குட்பட்ட பிள்ளை பயன்படுத்த அனுமதிப்பதும் இதில் அடங்கும்.
பிசினஸ்கள்
ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் சார்பாக நீங்கள் சேவையைப் பயன்படுத்தினால் அந்த நிறுவனத்தின் சார்பாகச் செயல்படும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதற்கும் அந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கிறது என்பதற்கும் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.
உங்கள் சேவைப் பயன்பாடு
சேவையின் உள்ளடக்கம்
சேவையின் உள்ளடக்கம் என்பது வீடியோக்கள், ஆடியோ (இசை, பிற ஒலிகள் போன்றவை), கிராஃபிக்ஸ், படங்கள், வார்த்தைகள் (கருத்துகள், ஸ்கிரிப்ட்டுகள் போன்றவை), பிராண்டிங் (வர்த்தகப் பெயர்கள், வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள், லோகோக்கள் போன்றவை), பங்கேற்பு அம்சங்கள், மென்பொருள் அளவீடுகள் மற்றும் பிற அனைத்தும் ஆகும் (மொத்தமாக "உள்ளடக்கம்” என அழைக்கப்படும்).
சேவைக்கு உள்ளடக்கத்தை வழங்கும் நபர் அல்லது தரப்பே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்யவோ வழங்கவோ வேண்டிய கட்டாயம் YouTubeக்கு இல்லை. சமூக வழிகாட்டுதல்கள் அல்லது சட்டத்தை மீறுதல் போன்ற காரணங்களால் ஏதேனும் உள்ளடக்கம் இந்த ஒப்பந்தத்துடன் இணங்கவில்லை என நீங்கள் கருதினால் எங்களிடம் புகாரளிக்கலாம்.
Google கணக்குகளும் YouTube சேனல்களும்
இந்தச் சேவையில் உலாவுதல், உள்ளடக்கத்தைத் தேடுதல் போன்றவற்றுக்கு Google கணக்கு தேவையில்லை. இருப்பினும் சில அம்சங்களைப் பயன்படுத்த உங்களிடம் Google கணக்கு இருப்பது அவசியம். வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவித்தல், சேனல்களில் குழு சேர்தல், சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல் போன்றவற்றுக்கு Google கணக்கு தேவை. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி Google கணக்கை உருவாக்கலாம்.
YouTube சேனலை உருவாக்கினால் வீடியோக்களைப் பதிவேற்றுதல், கருத்து தெரிவித்தல், பிளேலிஸ்ட்டுகளை உருவாக்குதல் (கிடைக்கும் இடங்களில்) போன்ற கூடுதல் அம்சங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் அணுகலைப் பெறலாம். சொந்தமாக YouTube சேனலை எப்படி உருவாக்குவது என்பதற்கான சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க உங்கள் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மூன்றாம் தரப்பு ஆப்ஸில் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உங்கள் கடவுச்சொல்லையோ Google கணக்கையோ யாரேனும் அனுமதியின்றிப் பயன்படுத்துவது தெரிய வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உட்பட, உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து மேலும் அறிக.
உங்கள் தகவல்கள்
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிக் கையாள்கிறோம் என்பதையும் சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனியுரிமையை எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதையும் எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. YouTube Kids தொடர்பான எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பற்றிய கூடுதல் தகவல்களை YouTube Kids தனியுரிமை அறிக்கை வழங்குகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காகவோ குடும்பச் செயல்பாடுகளுக்காகவோ பதிவேற்றிய உள்ளடக்கம் தவிர நீங்கள் சேவையில் பதிவேற்றும் ஆடியோ, ஆடியோவிஷுவல் ஆகியவற்றை YouTube தரவுச் செயலாக்க விதிமுறைகளின்படி செயலாக்குவோம். மேலும் அறிக.
அனுமதிகளும் கட்டுப்பாடுகளும்
இந்த ஒப்பந்தத்துடனும் பொருந்தக்கூடிய சட்டத்துடனும் இணங்கி இருக்கும் வரை, இந்தச் சேவை உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறதோ அப்படியே அதைப் பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக நோக்கமற்ற பயன்பாடுகளுக்காக உள்ளடக்கத்தைப் பார்க்கலாம் கேட்கலாம். உட்பொதியக்கூடிய YouTube பிளேயரின் மூலமும் YouTube வீடியோக்களைக் காட்டலாம்.
உங்கள் சேவைப் பயன்பாட்டிற்குப் பின்வரும் கட்டுப்பாடுகள் பொருந்தும். இவற்றைச் செய்ய உங்களுக்கு அனுமதியில்லை:
- சேவையின் ஒரு பகுதியையோ ஏதேனும் உள்ளடக்கத்தையோ அணுகுதல், மீண்டும் உருவாக்குதல், பதிவிறக்குதல், விநியோகித்தல், பரிமாறுதல், பிராட்காஸ்ட் செய்தல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல், உரிமம் அளித்தல், திருத்துதல், மாற்றியமைத்தல் அல்லது வேறு வகைகளில் பயன்படுத்துதல். இந்தச் சூழல்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்குகள்: (a) வெளிப்படையாகச் சேவையால் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் அல்லது (b) YouTube தரப்பிடமும் முறையான உரிமை பெற்றவர்களிடமும் (பொருந்தும் எனில்) எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெற்றிருத்தல்.
- பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் அல்லது (a) உள்ளடக்கத்தை வேறு காரணங்களுக்குப் பயன்படுத்துவதையோ நகலெடுப்பதையோ தடுக்கும்/கட்டுப்படுத்தும் அம்சங்கள், (b) சேவையையோ உள்ளடக்கத்தையோ பயன்படுத்துவதற்கு வரம்பிடும் அம்சங்கள் உட்பட சேவையின் எந்தப் பகுதியையும் மீறுதல், முடக்குதல், மோசடி செய்தல் அல்லது வேறு வகையில் தலையிடுதல் (அல்லது இதில் எதையாவது செய்ய முயற்சி செய்தல்).
- ஏதேனும் தானியங்கிக் கருவியை (ரோபோக்கள், பாட்நெட்டுகள், ஸ்க்ரேப்பர்கள் போன்றவை) பயன்படுத்தி சேவையை அணுகுதல். இவை மட்டுமே இதற்கு விதிவிலக்குகள்: (a) YouTubeன் robots.txt ஃபைல் உடன் இணங்கும் வகையில் பொதுத் தேடல் இன்ஜின்கள் அணுகுதல், (b) YouTubeன் எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெற்று அணுகுதல்.
- மேலே உள்ள (3)வது பிரிவின்கீழ் அனுமதிக்கப்படாதபோதோ ஒருவர் அனுமதிக்காதபோதோ அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய தகவல்களை (பயனர் பெயர்கள், முகங்கள் போன்றவை) சேகரித்தல் அல்லது தொகுத்தல்.
- அனுமதி பெறாத விளம்பரங்கள், தொழில்ரீதியான உள்ளடக்கம், பிற தேவையில்லாத அல்லது அதிகளவிலான கோரிக்கைகள் போன்றவற்றைச் சேவையைப் பயன்படுத்தி விநியோகித்தல்.
- சேவை உடனான பயனர் ஈடுபாட்டின் உண்மையான அளவீடுகளில் தவறான கணக்கீட்டை ஊக்குவித்தல் அல்லது உருவாக்குதல். இதில் சேனலில் குழு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, வீடியோவிற்குக் கிடைக்கும் பார்வைகள், விருப்பங்கள், விருப்பமின்மைகள் போன்றவற்றை மக்களுக்குப் பணம் செலுத்தியோ வேறு ஏதேனும் பொருட்களைத் தந்தோ உயர்த்துதல், நியாயமற்ற வேறு ஏதேனும் வழிகளில் அளவீடுகளை மாற்றி அமைத்தல் போன்றவை அடங்கும்.
- ஆதாரமற்ற, எரிச்சலூட்டும், சரியான நோக்கமில்லாத சமர்ப்பிப்புகள் போன்றவற்றின் மூலம் எந்தவொரு புகாரளித்தல், கொடியிடுதல், உரிமை கோரலை மறுத்தல் அல்லது மேல்முறையீடு செய்தல் தொடர்பான செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்.
- YouTubeன் போட்டிக்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்காமல் சேவையிலோ சேவை மூலமோ போட்டிகளை நடத்துதல்.
- தனிப்பட்ட அல்லது வர்த்தக நோக்கற்ற காரணங்களுக்காக இல்லாமல் வேறு காரணங்களுக்காக உள்ளடக்கத்தைப் பார்க்கவோ கேட்கவோ சேவையைப் பயன்படுத்துதல்
- (எ.கா: சேவையில் இருந்து பொதுவில் வீடியோக்களைத் திரையிடவோ இசையை ஸ்ட்ரீம் செய்யவோ கூடாது); அல்லது
- சேவையைப் பயன்படுத்தி (a) YouTubeல் விளம்பரப்படுத்துதல் கொள்கைகளில் அனுமதிக்கப்பட்டவை (இணக்கமான பிராடக்ட் பிளேஸ்மென்ட்டுகள் போன்றவை) தவிர, சேவை அல்லது உள்ளடக்கத்தின் மீதோ அவற்றைச் சுற்றியோ அவற்றிலோ வைக்கப்பட்ட விளம்பரங்கள்/ஸ்பான்சர்ஷிப்களை விற்பனை செய்தல்; (b) சேவையில் இருந்து பெறப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே உள்ள ஏதேனும் ஓர் இணையப்பக்கத்திலோ ஆப்ஸிலோ விளம்பரங்கள்/ஸ்பான்சர்ஷிப்களை விற்பனை செய்தல் அல்லது சேவையில் இருந்து பெறப்பட்ட உள்ளடக்கத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு விற்பனை செய்தல் (எ.கா: பயனர்களை ஈர்க்க முக்கிய காரணமாக YouTube வீடியோக்கள் இருக்கும் இணையதளத்தில் விளம்பரங்களை விற்பது).
கட்டுப்பாடுகள்
சேவையைப் பயன்படுத்துவதால் அதன் அம்சங்கள் மீது நீங்கள் உரிமை கொண்டாட முடியாது, உங்களுக்கு அது தொடர்பான உரிமைகளும் கிடைக்காது. பயனர் பெயர்களும் YouTube அல்லது மற்றவர்கள் இடுகையிட்ட உள்ளடக்கமும் இதில் அடங்கும்).
சேவையை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல்
YouTube தனது சேவையில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்வதுடன் அதை மேம்படுத்தியும் வருகிறது. இந்தத் தொடர் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சேவை முழுவதிலும் அல்லது சேவையின் சில பகுதிகளில் மட்டும் திருத்தங்களையும் மாற்றங்களையும் நாங்கள் செய்யக்கூடும். அம்சங்களையும் செயல்பாடுகளையும் சேர்த்தல் அல்லது அகற்றுதல், புதிய டிஜிட்டல் உள்ளடக்கத்தையோ சேவைகளையோ வழங்குதல் அல்லது பழையவற்றை நிறுத்துதல் போன்றவை இதில் அடங்கும். செயல்திறன் அல்லது பாதுகாப்பு மேம்பாடுகள், சட்டத்துடன் இணங்குவதற்காகச் செய்யப்படும் மாற்றங்கள், எங்கள் சிஸ்டங்களில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளையும் தவறான பயன்பாட்டையும் தடுத்தல் போன்ற காரணங்களுக்காகச் சேவை அல்லது அதன் பகுதியை நாங்கள் மாற்றவோ நிறுத்தவோ வேண்டியிருக்கலாம். இந்த மாற்றங்கள் பயனர்கள் அனைவரையுமோ சிலரையோ ஒருவரை மட்டுமோ கூட பாதிக்கக்கூடும். சேவைக்குத் தேவைப்படும் அல்லது சேவையில் இருக்கும் பதிவிறக்கக்கூடிய மென்பொருளில் (YouTube Studio ஆப்ஸ் போன்றவை) ஒரு புதிய பதிப்போ அம்சமோ கிடைக்கும்போது, உங்கள் சாதன அமைப்புகளைப் பொறுத்து மென்பொருள் தானாகப் புதுப்பிக்கப்படலாம். சேவைப் பயன்பாட்டை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய வகையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால் முன்கூட்டியே அறிவிப்போம். தவறான பயன்பாட்டைத் தடுத்தல், சட்டப்பூர்வத் தேவைகளுக்குப் பதிலளித்தல், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணுதல் போன்ற அவசரச் சூழ்நிலைகள் இதில் அடங்காது. உங்கள் Google கணக்கில் இருந்து உங்கள் உள்ளடக்கத்தை Google Takeout, மூலம் பதிவிறக்கும் வாய்ப்பையும் வழங்குவோம். இது பொருந்தக்கூடிய சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டது.
உங்கள் உள்ளடக்கமும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்
உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல்
உங்களிடம் YouTube சேனல் இருந்தால் நீங்கள் சேவையில் உள்ளடக்கத்தைப் பதிவேற்ற வாய்ப்புள்ளது. உங்கள் பிசினஸையோ கலை சார்ந்த தொழிலையோ விளம்பரப்படுத்த உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம். உள்ளடக்கத்தைப் பதிவேற்ற நீங்கள் தேர்வுசெய்தால், இந்த ஒப்பந்தத்துடனோ (YouTube சமூக வழிகாட்டுதல்கள் உட்பட) பொருந்தக்கூடிய சட்டங்களுடனோ இணங்காத எந்த உள்ளடக்கத்தையும் சமர்ப்பிக்கக்கூடாது.
குறிப்பாக, உங்கள் உள்ளடக்கம்:
a. மற்றவர்களின் உரிமைகளுக்கு (தனியுரிமை உட்பட) மதிப்பளிக்க வேண்டும்;
b. மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் உடைமையை (பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கம் போன்றவை) அவர்களின் அனுமதி பெறாமலோ சட்டப்பூர்வ உரிமை இல்லாமலோ கொண்டிருக்கக்கூடாது.;
c. உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கிழைக்கவோ துன்பம் ஏற்படுத்தவோ கூடாது (அல்லது அச்சுறுத்தவோ அவ்வாறு செய்பவர்களை ஊக்கப்படுத்தவோ கூடாது). சிறுவர்களுக்கு எதிரான செயல்கள் எதுவும் இருக்கக்கூடாது;
d. தவறாக வழிநடத்தக்கூடாது, முற்றிலும் பொய்யான தகவல்களை வழங்கவோ ஏமாற்றவோ கூடாது;
e. சட்டவிரோதமாக ஆள்மாறாட்டம் செய்யவோ அவதூறு செய்யவோ மிரட்டவோ துன்புறுத்தவோ பிறரை அச்சுறுத்தவோ கூடாது, ஆபாசமாக இருக்கக்கூடாது;
f. பொருந்தக்கூடிய சட்டங்களை மீறும்படி தூண்டக்கூடாது;
g. சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தவோ தீங்கிழைக்கவோ குறுக்கிடவோ தடைசெய்யவோ கூடாது — உதாரணம்: மோசடியாக அல்லது ஏமாற்றுகிற வழிகளில் சேவைகளை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல், மால்வேரைப் புகுத்துதல், ஸ்பேம் செய்தல், ஹேக் செய்தல், எங்கள் சிஸ்டங்களையோ பாதுகாப்பு நடவடிக்கைகளையோ பைபாஸ் செய்தல்.
சேவையில் நீங்கள் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்திற்கான சட்டப்பூர்வப் பொறுப்பை ஏற்கிறீர்கள். ஸ்பேம், மால்வேர் உட்பட, மீறல்களையும் தவறான பயன்பாடுகளையும் கண்டறிவதற்காக உங்கள் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்ய நாங்கள் தானியங்கி சிஸ்டங்களைப் பயன்படுத்தக்கூடும்.
நீங்கள் வழங்கும் உரிமைகள்
உங்கள் உள்ளடக்கத்திற்கான உரிமைகள் உங்களிடமே இருக்கும். YouTubeக்கும் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் குறிப்பிட்ட உரிமைகளை நீங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது போல் வழங்க வேண்டும்.
YouTubeக்கு வழங்கப்படும் உரிமம்
சேவையில் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், அதைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, மாற்றக்கூடிய, துணை உரிமம் வழங்கக்கூடிய ஓர் உரிமையை YouTubeக்கு வழங்குகிறீர்கள் (மறு உருவாக்கம் செய்தல், விநியோகித்தல், வருவிக்கப்பெற்ற படைப்பை உருவாக்குதல், காட்சிப்படுத்துதல், நிகழ்த்திக் காட்டுதல் உட்பட). இந்த உள்ளடக்கத்தை YouTube அதன் சேவை மற்றும் YouTube (அதன் வாரிசுகள் மற்றும்’ இணை நிறுவனங்களின்) பிசினஸ் தொடர்பாக மட்டுமே பயன்படுத்த முடியும். சேவை முழுவதையுமோ அதன் பகுதியையோ விளம்பரப்படுத்துதல், மறுவிநியோகம் செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
பிற பயனர்களுக்கு வழங்கப்படும் உரிமம்
இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பிற பயனர்கள் ஒவ்வொருவருக்கும் சேவையின் மூலம் உங்கள் உள்ளடக்கத்தை அணுகவும் பயன்படுத்தவும் உலகளாவிய, பிரத்தியேகமற்ற மற்றும் உரிமத்தொகை இல்லாத உரிமத்தையும் வழங்குகிறீர்கள். இதில் சேவையின் அம்சத்தின் மூலம் (வீடியோ பிளேபேக், உட்பொதிகள் போன்றவை) அனுமதிக்கப்படும் வகையில் மட்டும் மறு உருவாக்கம் செய்தல், விநியோகித்தல், வருவிக்கப்பெற்ற படைப்பை உருவாக்குதல், காட்சிப்படுத்துதல், நிகழ்த்திக் காட்டுதல் ஆகியவையும் அடங்கும். தெளிவாகச் சொன்னால், சேவை இல்லாமல் பயனர் தனிப்பட்ட முறையில் உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த உரிமைகளையோ அனுமதிகளையோ இந்த உரிமம் வழங்காது.
உரிமத்தின் கால அளவு
சேவையில் இருந்து உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் அகற்றிய/நீக்கிய பிறகும்கூட வர்த்தகரீதியாக ஏற்புடைய காலம் வரை, நீங்கள் அனுமதி வழங்கிய உரிமங்கள் தொடரும். இருப்பினும் நீங்கள் அகற்றிய/நீக்கிய உங்கள் வீடியோக்களின் சேவையக நகல்களை YouTube வைத்திருக்கலாம். ஆனால் அவற்றைக் காட்சிப்படுத்தாது, விநியோகிக்காது அல்லது நிகழ்த்திக் காட்டாது என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்.
வருமானம் ஈட்டுவதற்கான உரிமை
சேவையில் உங்கள் உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான உரிமையை YouTubeக்கு வழங்குகிறீர்கள் (உள்ளடக்கத்தில் அல்லது உள்ளடக்கத்திற்குள் விளம்பரங்களைக் காட்டுவது, பயனரிடம் அணுகலுக்காகக் கட்டணம் பெறுவது போன்றவையும் இதில் இடம்பெறலாம்). இந்த ஒப்பந்தத்தினால் உங்களுக்குப் பேமெண்ட்டுகள் எதுவும் கிடைக்காது. ஜூன் 1, 2021 முதல் உங்களுக்கும் YouTubeக்கும் இடையிலான வேறு எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் உங்களுக்கு உரிமையுள்ள பேமெண்ட்டுகள் (உதாரணமாக YouTube கூட்டாளர் திட்டம், சேனல் மெம்பர்ஷிப்கள், Super Chat ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பேமெண்ட்டுகள் உட்பட) உரிமத்தொகைகளாகக் கருதப்படும். சட்டப்படி தேவையெனில் இதுபோன்ற பேமெண்ட்டுகளில் இருந்து Google வரியைப் பிடித்தம் செய்யும்.
உங்கள் உள்ளடக்கத்தை அகற்றுதல்
சேவையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் உள்ளடக்கத்தை அகற்றலாம். அகற்றுவதற்கு முன்பு உங்கள் உள்ளடக்கத்தை நகலெடுத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறைகளுக்குத் தேவைப்படும் உரிமைகள் உங்களிடம் இல்லையெனில் நீங்கள் உங்கள் உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும்.
உள்ளடக்கத்தை YouTube அகற்றுதல்
உங்களுடைய உள்ளடக்கம், (1) இந்த ஒப்பந்தத்தை மீறுகிறது அல்லது (2) YouTube, எங்கள் பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று நாங்கள் நம்பினால், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அந்த உள்ளடக்கத்தை அகற்றவும் நீக்கவும் எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. எங்களின் செயலுக்கான காரணத்தை உங்களுக்குத் தெரிவிப்பதால் இவை நடைபெறலாம் என்று நம்பாதபட்சத்தில் எப்போதும் காரணத்தைத் தெரிவிப்போம்: (a) சட்டத்தையோ சட்ட அமலாக்க முகமையின் வழிகாட்டலையோ மீறுதல் அல்லது YouTubeக்கோ எங்கள் இணை நிறுவனங்களுக்கோ சட்டப்பூர்வ ஆபத்துகளை உருவாக்குதல் (b) சேவை நடத்தும் விசாரணைக்கோ அதன் நம்பகத்தன்மைக்கோ செயல்பாட்டிற்கோ இடையூறு விளைவித்தல் (c) ஏதேனும் ஒரு பயனர், பிற மூன்றாம் தரப்பினர், YouTube அல்லது எங்கள் இணை நிறுவனங்களுக்குத் தீங்கு விளைவித்தல். மறுபரிசீலனைக்குக் கோருவது எப்படி என்பது உட்பட, புகாரளித்தல், அமலாக்கம் ஆகியவை குறித்து எங்கள் உதவி மையத்தின் பிழையறிந்து திருத்துதல் பக்கத்தில் மேலும் தெரிந்துகொள்ளலாம்.
சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பு
YouTube சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்திற்கென “எதிர்ப்புகள்” எனப்படும் சிஸ்டத்தை YouTube செயல்படுத்துகிறது. ஒவ்வொரு எதிர்ப்பும் வேறுபட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். இவற்றால் உங்கள் சேனல் YouTubeல் இருந்து நிரந்தரமாக அகற்றப்படக்கூடும். எதிர்ப்பு உங்கள் சேனலை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதற்கான முழு விளக்கமும் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பு பற்றிய அடிப்படைகள் பக்கத்தில் கிடைக்கிறது. தவறாக எதிர்ப்பு வழங்கப்பட்டதாக நீங்கள் கருதினால் இங்கே மறுபரிசீலனைக்குக் கோரலாம்.
எதிர்ப்பு காரணமாக உங்கள் சேனல் கட்டுப்படுத்தப்பட்டால் அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு மற்றொரு சேனலை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. இந்தத் தடையை மீறுவது என்பது இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக மீறுவதாகும். அப்படிச் செய்தால் உங்கள் Google கணக்கையோ சேவையின் அனைத்து அல்லது பகுதிக்கான அணுகலையோ முடக்குவதற்கான முழு அதிகாரமும் Googleளுக்கு உண்டு.
பதிப்புரிமைப் பாதுகாப்பு
பதிப்புரிமை பெற்றவர்கள் தங்கள் அறிவுசார் உடைமையை ஆன்லைனில் நிர்வகிப்பதற்கு உதவும் தகவல்களை எங்கள் YouTube பதிப்புரிமை மையத்தில் வழங்குகிறோம். சேவையில் உங்கள் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால் எங்களுக்கு அறிவிப்பை அனுப்புங்கள்.
எங்கள் YouTube பதிப்புரிமை மையத்தின் செயல்முறைகளின்படி பதிப்புரிமை மீறல் தொடர்பான அறிவிப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்ப்பதற்கான வழிகள் பற்றிய தகவல்களும் மையத்தில் கிடைக்கும். தொடர்ந்து விதியை மீறுபவர்களை, சேவையை அணுக விடாமல் YouTubeன் கொள்கைகள் பொருத்தமான சூழ்நிலைகளில் நிரந்தரமாகத் தடுக்கும்.
கணக்கை இடைநீக்குதல் மற்றும் முடக்குதல்
நீங்களாக முடக்குதல்
சேவையைப் பயன்படுத்துவதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். உங்கள் Google கணக்கில் இருந்து சேவையை நீக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சேவையை நீக்கினால் உங்கள் YouTube சேனல் மூடப்பட்டு உங்கள் தரவு அகற்றப்படும். அதற்கு முன்னர் உங்கள் தரவின் நகலைப் பதிவிறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
YouTube முடக்குதல் மற்றும் இடைநிறுத்துதல்
உங்கள் Google கணக்கையோ சேவையின் ஒரு பகுதிக்கோ முழுவதுக்குமோ இருக்கும் அணுகலையோ இடைநிறுத்துவதற்கான அல்லது முடக்குவதற்கான முழு அதிகாரமும் YouTubeக்குப் பின்வரும் சூழல்களில் உண்டு: (a) இந்த ஒப்பந்தத்தை நீங்கள் கடுமையாக அல்லது தொடர்ந்து மீறும்போது (b) சட்டப்பூர்வத் தேவைகள் அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதற்காக நாங்கள் அப்படிச் செய்ய வேண்டியிருக்கும்போது (c) பயனர், பிற மூன்றாம் தரப்பினர், YouTube, எங்கள் இணை நிறுவனங்கள் ஆகியோருக்குப் பொறுப்பேற்கும் நிலையை அல்லது தீங்கை உருவாக்கும் (அல்லது உருவாக்கக்கூடிய) செயல் நடந்துள்ளது என்று நாங்கள் நம்பும்போது.
முடக்குதல் அல்லது இடைநிறுத்துதல் தொடர்பான அறிவிப்புகள்
YouTube செய்த இடைநீக்கம் அல்லது நிறுத்தத்துக்கான காரணத்தை உங்களுக்குத் தெரிவிப்பதால் இவை நடைபெறலாம் என்று நம்பாதபட்சத்தில் எப்போதும் காரணத்தைத் தெரிவிப்போம்: (a) சட்டத்தையோ ஒரு சட்ட அமலாக்க முகமையின் வழிகாட்டுதலையோ மீறுவது; (b) விசாரணைக்கு இடையூறு விளைவிப்பது; (c) சேவையின் செயல்பாட்டிற்கோ நம்பகத்தன்மைக்கோ இடையூறு விளைவிப்பது; அல்லது (d) ஏதேனும் பயனர், பிற மூன்றாம் தரப்பினர், YouTube அல்லது எங்கள் இணை நிறுவனங்களுக்குத் தீங்கு விளைவிப்பது. சேவை தொடர்பான மாற்றங்களுக்காக YouTube உங்கள் அணுகலை நிறுத்தினால், சாத்தியமுள்ள பட்சத்தில் சேவையிலிருந்து உங்கள் உள்ளடக்கத்தை நகலெடுப்பதற்குப் போதுமான கால அவகாசம் உங்களுக்கு வழங்கப்படும்.
கணக்கை முடக்குதல் அல்லது இடைநிறுத்துதலின் விளைவு
உங்கள் Google கணக்கு நிறுத்தப்பட்டிருந்தாலோ சேவையில் உங்கள் Google கணக்கின் அணுகல் வரம்பிடப்பட்டிருந்தாலோ கணக்கு இல்லாமலேயே சேவையின் சில பகுதிகளை ('பார்க்க மட்டும்' என்பதைப்போல) தொடர்ந்து பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட பயன்பாட்டிற்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும். உங்கள் Google கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டது அல்லது இடைநிறுத்தப்பட்டது என நீங்கள் கருதினால் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி மறுபரிசீலனைக்குக் கோரலாம்.
சேவையில் உள்ள மென்பொருள் பற்றிய தகவல்கள்
பதிவிறக்கக்கூடிய மென்பொருள்
பதிவிறக்கக்கூடிய மென்பொருள் சேவைக்குத் தேவையாக இருக்கும்போதோ சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும்போதோ (YouTube Studio ஆப்ஸ் போன்றவை), உரிமம் வழங்கும் கூடுதல் விதிமுறைகளால் அந்த மென்பொருள் நிர்வகிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், மென்பொருளைப் பயன்படுத்த உங்களுக்குத் தனிப்பட்ட, உலகளாவிய, உரிமத்தொகை இல்லாத, வேறு யாருக்கும் மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற உரிமத்தை YouTube அதன் சேவையின் ஒரு பகுதியாக வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில் அனுமதித்துள்ளபடி YouTube வழங்கும் சேவையின் பலனைப் பயன்படுத்தி மகிழ்வதே இந்த உரிமத்தின் நோக்கமாகும். உங்களிடம் YouTubeன் எழுத்துப்பூர்வ அனுமதி இருந்தால் தவிர,மென்பொருளின் எந்தவொரு பகுதியையும் நகலெடுக்கவோ மாற்றவோ விநியோகிக்கவோ விற்கவோ துணை உரிமம் வழங்கவோ குத்தகைக்கு விடவோ நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
ஓப்பன் சோர்ஸ்
எங்கள் சேவையில் பயன்படுத்தப்படும் சில மென்பொருள்களை நாங்கள் உங்களுக்கு ஓப்பன் சோர்ஸ், உரிமத்தொகை இல்லாத உரிமம் மூலம் வழங்குகிறோம். ஓப்பன் சோர்ஸ் உரிமத்தில் இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் சில விதிகள் இருக்கக்கூடும். எனவே அந்த உரிமங்களைத் தெளிவாகப் படிக்கவும்.
பிற சட்ட விதிமுறைகள்
உத்திரவாதத்திற்கான பொறுப்புதுறப்பு
இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தாலோ சட்டப்படி தேவைப்பட்டாலோ தவிர, இந்தச் சேவையை “அப்படியே” வழங்குகிறோம். மேலும் YouTube தன் சேவையைப் பற்றி எந்தக் குறிப்பிட்ட உறுதியளிப்போ உத்திரவாதத்தையோ அளிக்காது. உதாரணமாக, இவற்றுக்கு நாங்கள் உத்திரவாதம் அளிப்பதில்லை: (A) சேவை மூலம் வழங்கப்பட்ட உள்ளடக்கம்; (B) சேவையின் குறிப்பிட்ட சில அம்சங்கள் அல்லது அவற்றின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, கிடைக்கும்தன்மை மற்றும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன்; (C) நீங்கள் சமர்ப்பிக்கும் ஏதேனும் உள்ளடக்கம் சேவையில் அணுகக்கூடிய நிலையில் இருத்தல்.
பொறுப்பிற்கான வரம்பு
பின்வரும் காரணங்களால், லாபங்கள், வருவாய்கள், வணிக வாய்ப்புகள், நன்மதிப்பு, எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பு, தரவு இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமாகவோ விளைவாகவோ ஏற்படும் ஏதேனும் சேதங்கள், இழப்பீட்டுத் தண்டனைகள் ஆகியவற்றுக்கு YouTube, அதன் துணை நிறுவனங்கள், அதிகாரிகள், இயக்குனர்கள், பணியாளர்கள், ஏஜெண்ட்டுகள் ஆகியோர் பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்பட்டால் தவிர பொறுப்பேற்க மாட்டார்கள்:
- சேவையில் உள்ள பிழைகள், தவறுகள் அல்லது துல்லியமின்மை;
- நீங்கள் சேவையைப் பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட்ட தனிப்பட்ட காயங்கள் அல்லது பொருட்சேதம்;
- சேவையை அங்கீகாரமில்லாமல் பயன்படுத்துவது;
- சேவையில் ஏற்பட்ட ஏதேனும் குறுக்கீடுகள் அல்லது நிறுத்துதல்கள்;
- ஏதேனும் மூன்றாம் தரப்பினரால் சேவையின் மூலமோ சேவையிலோ டிரான்ஸ்மிட் செய்யப்பட்ட வைரஸ்கள் அல்லது தீங்கிழைக்கும் குறியீடு;
- நீங்கள் பயன்படுத்தும் உள்ளடக்கம் உட்பட, பயனர் அல்லது YouTube சமர்ப்பித்த ஏதேனும் உள்ளடக்கம்; மற்றும்/அல்லது
- ஏதேனும் உள்ளடக்கம் கிடைக்காத அல்லது அகற்றப்பட்ட நிலை.
உத்திரவாதம், ஒப்பந்தம், பொல்லாங்குக் குற்றம் அல்லது எந்த சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் உரிமைகோரல்கள் இருப்பினும் இந்த விதிகள் அவற்றுக்குப் பொருந்தும்.
பொருந்தக்கூடிய சட்டம் அனுமதித்துள்ள அளவின்படி, சேவை தொடர்பாகச் செய்யப்படும் எந்தவொரு உரிமைகோரலுக்கும் பின்வருவனவற்றில் எது அதிகமோ அந்த மதிப்பிற்கே YouTube மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மொத்தக் கடப்பாடு இருக்கும்: (A) உரிமைகோரல் குறித்து YouTubeக்கு நீங்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கிய தேதிக்கு முன்பு 12 மாதங்களுக்குள் சேவையைப் பயன்படுத்தியதற்காக YouTube உங்களுக்குச் செலுத்தியுள்ள வருவாய் மற்றும் (B) $500 அமெரிக்க டாலர்கள், இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை வழங்கப்படும்.
நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து பாதுகாப்பு
பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பபட்டுள்ள வரம்பு வரை, YouTube, அதன் இணை நிறுவனங்கள், அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள் மற்றும் ஏஜெண்ட்டுகளை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இருந்தும் இதற்கு எதிராக வரும் ஏதேனும் மற்றும் அனைத்துக் கோரல்கள், சேத இழப்பீடுகள், கட்டாயக் கடமைகள், நஷ்டங்கள், பொறுப்புகள், கொடுக்கப்பட்ட விலை அல்லது கடன் மற்றும் செலவுகளில் இருந்து (வழக்கறிஞரின் ஃபீஸ் சேர்த்து, அதுமட்டுமல்லாது பிறவும்) பாதுகாக்கவும், நஷ்டஈடு செலுத்தவும் மற்றும் இழப்பை ஈடுகட்டவும் ஏற்கிறீர்கள்: (i) இந்தச் சேவையின் உங்கள் பயன்பாடு; (ii) இந்தச் சேவை விதிமுறைகளின் எந்த விதிகளையும் மீறுதல்; (iii) ஏதேனும் பதிப்புரிமை, உடைமை அல்லது தனியுரிமை போன்ற, அது மட்டுமல்லாத பிற விஷயங்களில் ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் உரிமையை மீறுதல்; அல்லது (iv) உங்கள் உள்ளடக்கம் ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்குச் சேதத்தை விளைவித்திருந்தால் அது தொடர்பான உரிமைகோரல்கள். இந்தப் பாதுகாப்பு மற்றும் நஷ்ட ஈடு செலுத்தும் வாக்குறுதி இந்த ஒப்பந்தம் மற்றும் உங்கள் சேவைப் பயன்பாட்டைத் தாண்டியும் நீடித்திருக்கும்.
மூன்றாம் தரப்பினரின் இணைப்புகள்
YouTube கட்டுப்படுத்தாத அல்லது அதற்கு உரிமை இல்லாத இணைய சேவைகளுக்கும் மூன்றாம் தரப்பினரின் இணையதளங்களுக்குமான இணைப்புகள் சேவையில் இருக்கக்கூடும். அந்த இணையச் சேவைகள் மற்றும் இணையதளங்கள் மீது YouTubeக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது மற்றும் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. சேவையை விட்டு வெளியே செல்லும்போது கவனமாக இருக்கவும். நீங்கள் செல்லும் இணையச் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் இணையதளங்கள் ஒவ்வொன்றிலும் இருக்கும் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்கள்
இந்த ஒப்பந்தத்தை மாற்றுதல்
இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மாற்றக்கூடும். (1) எங்கள் சேவை அல்லது நாங்கள் பிசினஸ் செய்யும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிப்பதற்கு - உதாரணமாக, புதிய தயாரிப்புகளையோ அம்சங்களையோ சேர்த்தல், பழையவற்றை அகற்றுதல் போன்றவை (2) சட்டம், ஒழுங்குமுறை ஆணையம் அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக (3) தவறான பயன்பாடு அல்லது தீங்கிழைத்தலைத் தடுப்பதற்கு .
இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் கணிசமான அளவில் மாற்றங்களைச் செய்தால் முன்கூட்டியே அறிவிப்போம். மாற்றங்களை மதிப்பாய்வு செய்யும் வாய்ப்பையும் வழங்குவோம். விதிவிலக்குகள்: (1) புதிய தயாரிப்பையோ அம்சத்தையோ வெளியிடும்போது அல்லது (2) நடந்துகொண்டிருக்கும் தவறான பயன்பாட்டைத் தடுத்தல், சட்டப்பூர்வத் தேவைகளுக்குப் பதிலளித்தல் போன்ற அவசரக் காலங்களில். புதிய விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லையெனில் நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் அதை அகற்ற வேண்டும். சேவையைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்தல்
நீங்கள் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலும், இந்த ஒப்பந்தத்தில் பின்வரும் விதிகள் உங்களுக்குத் தொடர்ந்து பொருந்தும்: "பிற சட்ட வரையறைகள்", "இந்த ஒப்பந்தத்தைப் பற்றி", மற்றும் நீங்கள் வழங்கிய உரிமங்கள் "உரிமத்தின் கால அளவு" என்பதன் கீழ் விவரிக்கப்பட்டுள்ளபடி தொடரும்.
ஒப்பந்தத்தின் செயல்படுத்தக்கூடிய தன்மை
இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பகுதியை எந்தக் காரணத்தினாலோ அமலாக்கம் செய்ய முடியவில்லை எனில் அது பிற விதிமுறைகளைப் பாதிக்காது.
உரிமை விட்டுக்கொடுக்கப்படாது
இந்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் இணங்காமல் இருந்து அதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எங்களிடம் இருக்கக்கூடிய எந்த உரிமையையும் (எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை போன்றவை) நாங்கள் விட்டுக்கொடுப்பதாக அர்த்தம் இல்லை.
ஒப்பந்தம் குறித்த புரிதல்
இந்த விதிகளில், "உட்பட" அல்லது "அடங்கும்" என்றால் "இவை தவிர பிறவும் அடங்கும்" என்று அர்த்தம். மேலும் அனைத்து உதாரணங்களும் விளக்குவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.
நிர்வகிக்கும் சட்டம்
சட்ட முரண்பாட்டு விதிகளைப்பொருட்படுத்தாது, இந்த விதிமுறைகள் அல்லது சேவையில் இருந்து எழும் அல்லது இவை தொடர்புடைய அனைத்து வழக்குகளும் கலிஃபோர்னியா சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும். இந்த வழக்குகளுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரா கவுண்ட்டியின் அதிகார எல்லைக்குள் இருக்கும் ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் பிரத்தியேகமாகத்தீர்வுகாணப்படும்.மேலும், நீங்களும் YouTubeம் இந்த நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார எல்லைக்கு உட்படுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இந்த வழக்குகளுக்குத் தீர்வுகாணப்படுவதை பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டம் தடுக்கும் பட்சத்தில், உங்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். அதேபோன்று, இந்த வழக்குகளுக்குத் தீர்வுகாண கலிஃபோர்னியா சட்டத்தை உள்ளூர் நீதிமன்றம் பயன்படுத்துவதைப் பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டம் தடுக்கும் பட்சத்தில், நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின்படி அவற்றுக்குத் தீர்வுகாணப்படும்.
